என் உயிரினும் மேலான பேச்சுப் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் இன்று பரிசு

3 weeks ago 4

சென்னை: கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு, தலைமைக்கழகத்துக்கு 100 பேச்சாளர்களை உருவாக்கித்தர வேண்டும் என்கிற வகையில், ‘என் உயிரினும் மேலான’ பேச்சுப் போட்டியை நடத்த திமுக இளைஞர் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க 17 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அதிலிருந்து நடுவர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 913 பேர் மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். மண்டல அளவில் வெற்றி பெற்ற 182 போட்டியாளர்களிலிருந்து முதல் 3 வெற்றியாளர்களை அடையாளம் காண்பதற்கான இறுதிப் போட்டிகள், சென்னை அன்பகத்திலும், தியாகராய நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்திலும் நேற்று நடைபெற்றது.

இப்பேச்சுப்போட்டியில் வெல்வோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபெறும் பரிசளிப்பு விழாவில், பரிசுகளை வழங்கி வாழ்த்த உள்ளார். இதற்கிடையில் அன்பகத்தில் நடைபெற்று வந்த இறுதிப்போட்டியை நேற்று திமுக இளைஞர் அணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். மேலும் மாணவ – மாணவியரின் உரைகளை கேட்டு அவர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது திராவிட இயக்கத்தின் அடுத்த தலைமுறை பேச்சாளர்களாக உருவெடுக்க உள்ள ‘என் உயிரினும் மேலான’ பேச்சுப் போட்டியின் போட்டியாளர்களை உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தி மகிழ்ந்தார்.

The post என் உயிரினும் மேலான பேச்சுப் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் இன்று பரிசு appeared first on Dinakaran.

Read Entire Article