எந்த பிரச்சினைக்கும் போர் தீர்வல்ல; மெகபூபா முப்தி

3 hours ago 4

 

ஸ்ரீநகர்,

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்த ராணுவ நடவடிக்கையின்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது.

இந்த சண்டையில் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில், ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி குண்டுகளை வீசியும் தாக்கியது. இந்த தாக்குதலில் பலரின் வீடுகள் சேதமடைந்தன.

இந்நிலையில், பாகிஸ்தான் தாக்குதலில் பூஞ்ச் மாவட்டத்தில் காயமடைந்தவர்களை ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி இன்று சந்தித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் மெகபூபா பேசியதாவது, பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். எந்த பிரச்சினைக்கும் போர் தீர்வல்ல. போரால் எதையும் சாதிக்க முடியாது. இரு தரப்பிலும் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இருநாடுகளுக்கு இடையே சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது. அது நிரந்தர சண்டை நிறுத்தமாக இருக்க இரு நாடுகளும் முயற்சிக்க வேண்டும்' என்றார்.

Read Entire Article