திருவொற்றியூர்: எண்ணூர் அன்னை சிவகாமி நகர் அருகே ரயில்வே துறைக்குச் சொந்தமான மழைநீர் சேமிப்பு குளம் உள்ளது. இந்த குளத்தில் நேற்று ஆண் சடலம் மிதந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள், எண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில், எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 9வது தெருவைச் சேர்ந்த பாக்கியராஜ் (28) என்பதும், அதே பகுதியில் உள்ள டீ கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி, சில வருங்களில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றதும், இதனால் விரக்தியில் அடிக்கடி மது அருந்திவிட்டு அப்பகுதியில் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது.
The post எண்ணூர் குளத்தில் வாலிபர் சடலம் appeared first on Dinakaran.