எடப்பாடி பழனிசாமியின் மனு தள்ளுபடி: தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை

3 hours ago 1

ஈரோடு,

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடை நீக்கப்படுவதாக ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் சின்ன ஒதுக்கீடு சட்டத்தின்படி தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்றும், உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க உரிமையில்லை என்கிற எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்தும் உத்தரவிடப்பட்டது.

ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி. பழனிசாமி உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று சென்னை ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது. தற்போது அந்த தடையை நீக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க. விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக கோவையில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமிக்கான பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தநிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article