எடப்பாடி கூறுவது வார்த்தை ஜாலம்: ஓபிஎஸ் பதிலடி

3 hours ago 1

தேவகோட்டை: எடப்பாடி கூறுவது வார்த்தை ஜாலம் என்று தேவகோட்டையில் ஓபிஎஸ் தெரிவித்தார்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களிடம் கூறியதாவது: எடப்பாடி கூறுவது வார்த்தை ஜாலத்திற்கு மட்டுமே ஒத்து வரும். நடைமுறைக்கு ஒத்து வராது. பிரிந்தவர்கள் இணைந்தால் மட்டுமே 2026 தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற சூழல் தமிழக மக்களால் மூலை முடுக்குகளெல்லாம் ஒலித்துக் கொண்டுள்ளது. திராவிட வரலாற்றில் இருமொழிக் கொள்கைதான் உள்ளது.

அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மட்டுமல்லாது, நான் முதல்வராக இருந்த போது கூட இருமொழிக் கொள்கைக்கு தான் தீர்மானம் நிறைவேற்றினோம். தூய அதிமுக தொண்டர்கள் யாரும் எந்த கட்சிக்கும் போக மாட்டார்கள் என்பது அதிமுகவின் வரலாறு. எந்த ஒரு தேர்தலிலும் விஜய் நின்று மக்களுடைய தீர்ப்பை பெறவில்லை. மக்களுடைய தீர்ப்பு அவரை நோக்கி எப்படி இருக்கும் என்பதை தெரிந்த பிறகு தான் கருத்து சொல்ல முடியும். இவ்வாறு தெரிவித்தார்.

The post எடப்பாடி கூறுவது வார்த்தை ஜாலம்: ஓபிஎஸ் பதிலடி appeared first on Dinakaran.

Read Entire Article