எகிப்தில் 45 பயணிகளுடன் சென்ற சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கி விபத்து: 6 பேர் பலி

3 days ago 3

கெய்ரோ: எகிப்து நாட்டில் சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் கடலில் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். எகிப்து நாட்டின் புகழ் பெற்ற செங்கடலில் உள்ள பவள பாறைகளை பார்வையிடுவதற்காக ஹர்கடாவில் உள்ள சிண்ட்பாத் ஹோட்டலுக்கு சொந்தமான சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் ஒன்று 45 சுற்றுலா பயணிகளுடன் நேற்று சென்று கொண்டிருந்தது. புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே கடற்கரையில் இருந்து சுமார் 1 கிமீ தூரத்திலேயே நீர்மூழ்கி கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர் கடலில் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேர தேடலுக்கு பிறகு 6 பேரின் உடல்களை மீட்டனர். மேலும் விபத்தில் காயமடைந்த 9 பேர் உள்பட 29 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post எகிப்தில் 45 பயணிகளுடன் சென்ற சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கி விபத்து: 6 பேர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article