
சென்னை,
பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடிப்பில் கடந்த 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியான படம் 'ஜாத்'
ரெஜினா கசாண்ட்ரா, சயாமி கெர் , ஜெகபதி பாபு , ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரந்தீப் ஹுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் ரூ.70 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது.
இப்படத்தில் 'டச் கியா' பாடலுக்கு நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடனமாடி இருந்தார். மிகவும் வைரலான இப்பாடலில் டேன்ஸ் மாஸ்டர் ஜானி நடன இயக்குனராக பணிபுரிந்திருந்தார். இந்நிலையில், 'டச் கியா' பாடலில் ஊர்வசி ரவுத்தேலாவுடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி என்று ஜானி இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்.