ஊட்டியில் திபெத்தியர்கள் அமைதி பேரணி

3 hours ago 1

ஊட்டி, மார்ச் 11: திபெத் நாட்டின் எழுச்சி நாள் மற்றும் உதய தினத்தை முன்னிட்டு நேற்று ஊட்டியில் திபெத்தியர்கள் அமைாதி பேரணியில் ஈடுபட்டனர். சீனாவின் கட்டுப்பாட்டில் கடந்த 66 ஆண்டுகளாக திபெத் உள்ளதால், அந்த நாட்டைச் சேர்ந்த பலர் பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். திபெத் சுதந்திர போராட்டத்தில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களை நினைவுகூரும் வகையில், திபெத் உதய தினம் மற்றும் எழுச்சி தினம் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 10ம் தேதி திபெத் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஊட்டியில் திபெத் அகதிகள் அமைதி பேரணி நடத்தினர். திபெத் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்க இந்திய அரசு உதவ வேண்டும். திபெத் நாட்டிற்கு சுதந்திரம் அளிக்க சீனா முன்வர வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அமைதி பேரணியில் ஈடுபட்டனர். இப்பேரணி ஊட்டி தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் துவங்கி, மதுவானா, சேரிங்கிராஸ் வழியாக மீண்டும் பூங்கா நுழைவு வாயிலை அடைந்தது. இதில், ஏராளமான திபெத் மக்கள் கலந்து கொண்டனர்.

The post ஊட்டியில் திபெத்தியர்கள் அமைதி பேரணி appeared first on Dinakaran.

Read Entire Article