ஊட்டியில் 518வது மலைச்சாரல் கவியரங்கம்

2 months ago 10

 

ஊட்டி, டிச.3: நீலகிரி மாவட்ட மலைச்சாரல் தமிழ் கவிஞர்கள் சங்கத்தின் சார்பில் மாதந்தோறும் கவியரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இக்கவியரங்கம் கடந்த பல ஆண்டுகளாக மாதம் தவறாமல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 518வது மலைச்சாரல் கவியரங்கம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்றது. கவிமன்ற செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார். தலைவர் பெள்ளி தலைமை வகித்தார்.

இக்கவியரங்கில் புதிய கவிதை தொகுப்புகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கவிஞர்கள் அமுதவல்லி, ஜேபி., ரமேஷ் மற்றும் புலவர்கள் ஜனார்த்தனன், சுந்தரபாண்டியன் உட்பட பலர் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் கவிதை வாசித்தனர்.

The post ஊட்டியில் 518வது மலைச்சாரல் கவியரங்கம் appeared first on Dinakaran.

Read Entire Article