ஊட்டி : ஊட்டி – குன்னூர் சாலையில் தலையாட்டிமந்து முதல் லவ்டேல் சாலை சந்திப்பு வரை கால்வாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தை பிற மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய சாலையாக கூடலூரில் இருந்து ஊட்டி, குன்னூர் வழியாக மேட்டுபாளையம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆகும்.
வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை சரி செய்யும் நோக்கில் இச்சாலையில் கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
சாலை குறுகலாக உள்ள இடங்கள், விபத்து ஏற்படும் இடங்கள் கண்டறிந்து விரிவாக்கம் செய்து தடுப்புசுவர் அமைத்தல், மழைநீர் வழிந்தோட வசதியாக நிலத்தடி குழாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது.
இந்த சூழலில் தலையாட்டிமந்து முதல் சேரிங்கிராஸ் வரை மேம்பாட்டு பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இன்டர்லாக் கற்கள் அகற்றப்பட்டு புதிதாக இன்டர்லாக் கற்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தலையாட்டிமந்து முதல் லவ்டேல் சந்திப்பு வரை மழைநீர் மற்றும் கழிவுநீர் வழிந்தோட வசதியாக கால்வாய் இல்லாமல் இருந்து வந்தது. இதனை சரி செய்யும் விதமாக தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரம் பள்ளம் தொண்டப்பட்டு கால்வாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
The post ஊட்டி – குன்னூர் சாலையில் தலையாட்டி மந்து முதல் லவ்டேல் சாலை சந்திப்பு வரை கால்வாய் அமைப்பு பணி appeared first on Dinakaran.