உலகின் இளம் வயது டெக்வான்டோ பயிற்சியாளராக சாதனை படைத்துள்ள சம்யுக்தா நாராயணனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வாழ்த்து..!!

11 hours ago 2

மதுரை: உலகின் இளம் வயது டெக்வான்டோ பயிற்சியாளராக சாதனை படைத்துள்ள மதுரையைச் சேர்ந்த சம்யுக்தா நாராயணனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளார். மதுரையை சேர்ந்த சம்யுக்தா (7) உலக சாதனை படைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளர் போட்டியில் கலந்து கொண்டார். இந்த உலக சாதனை முயற்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சம்யுக்தா 270 நாட்களில் கேட்கப்பட்ட அனைத்து டேக்வாண்டோ பாடத்திட்டத்தையும் செய்து காட்டி இந்த சாதனைக்கு தகுதி பெற்று கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தால் உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளர் பட்டத்தைப் பெற்றார். இந்த நிலையில்,இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி எக்ஸ் வலைத்தளத்தில் கூறுகையில், உலகின் இளம் வயது டெக்வான்டோ பயிற்சியாளராக சாதனை படைத்துள்ளார் மதுரையைச் சேர்ந்த சம்யுக்தா நாராயணன். உலக அரங்கில் மதுரையின் பெருமைமிகு அடையாளமாக உயர்ந்திருக்கும் வீராங்கனைக்கு எனது அன்பு வாழ்த்துகள் . அவரது பெற்றோர் ஸ்ருதி மற்றும் நாராயணன் இருவரும் சிறு வயதிலிருந்தே அவரது திறமைகளை வளர்த்துக் கொண்டு வந்தமைக்கு எனது அன்பு . இவ்வாறு வாழ்த்து தெரிவித்தார்.

The post உலகின் இளம் வயது டெக்வான்டோ பயிற்சியாளராக சாதனை படைத்துள்ள சம்யுக்தா நாராயணனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Read Entire Article