புதுடெல்லி: சர்வதேச நாணய நிதியம் இந்தாண்டு ஏப்ரல் மாதத்திற்கான சர்வதேச பொருளாதாரத்தை மதிப்பிட்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு ஜப்பானை பின்னுக்கு தள்ளிவிட்டு உலகின் நான்காவது பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 4.187 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது, இது ஜப்பானின் 4.186 டிரில்லியன் டாலர்களை விட சற்று அதிகமாகும்.
மேலும், 2028ம் ஆண்டுக்குள் ஜெர்மனியை முந்திக் ெகாண்டு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது, அப்போது இந்தியாவின் ஜிடிபி 5.58 டிரில்லியன் டாலர்களாகவும், ஜெர்மனியின் ஜிடிபி 5.25 டிரில்லியன் டாலர்களாகவும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 6.5% வளர்ச்சி கண்டுள்ளது. இந்தாண்டும், அடுத்தாண்டும் 6.2% வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு இந்தியாவின் ஜிடிபி 4.187 டிரில்லியன் டாலர்களாகவும், ஜப்பானின் ஜிடிபி 4.186 டிரில்லியன் டாலர்களாகவும் இருக்கும். அதே 2027ல் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. உலகின் வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகி வரும்நிலையில், கடந்த பத்தாண்டுகளில் 105% வளர்ச்சியுடன், இங்கிலாந்து மற்றும் பிரான்சை முந்தித் சென்றது. இந்தியாவின் இந்த வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு முதலீடு, டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் திட்டங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடனான பதற்றங்கள் இருந்தபோதிலும், இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மை பாதிக்கப்படவில்லை என ‘மூடிஸ்’ நிறுவனம் மதிப்பீடு தெரிவிக்கிறது. வரும் 2027ல் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாகவும், 2032ல் 10 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாகவும் இந்தியா மாறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஜப்பானை முந்திக் கொண்டு இந்தியா 4வது பெரிய பொருளாதார நாடாக உருவாகும் என்று கணிக்ப்பட்டுள்ளதால், பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா புதிய உச்சத்தை தொடும் என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
The post உலகின் 4வது பொருளாதார நாடாக இருந்த ஜப்பானை பின்னுக்கு தள்ளியது இந்தியா: சர்வதேச நாணய நிதியம் கணிப்பு appeared first on Dinakaran.