உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பிரேசில் அபார வெற்றி

3 months ago 22

பிரேசிலியா,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் 2026-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறுகிறது. 48 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு, போட்டியை நடத்தும் நாடுகள் தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வாகும். இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் மண்டல வாரியாக பல்வேறு நாடுகளில் நடக்கிறது.

இதன் தென்அமெரிக்க கண்ட அணிகளுக்கான தகுதி சுற்றில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

இதில் பிரேசிலியாவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி 4-0 என்ற கோல் கணக்கில் பெருவை துவம்சம் செய்தது. ராபின்ஹா (38 மற்றும் 54-வது நிமிடம்), ஆன்ரியாஸ் பெரீரா (71-வது நிமிடம்), லூயிஸ் ஹென்ரிக் (74-வது நிமிடம்) ஆகியோர் பிரேசில் அணியில் கோல் அடித்தனர். 5-வது வெற்றியை ருசித்த பிரேசில் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறது.

Read Entire Article