உலக அளவில் பெரும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை: நாளை இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

1 week ago 5

 

டெல்லி,

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு நாடுகள் மீது பொருளாதார தடைகளையும் விதித்து வருகிறார்.

மேலும், பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதி்ப்பு முறையையும் டிரம்ப் மேற்கொண்டுள்ளார். அதன்படி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 கூடுதலாக சதவீத வரி வித்துள்ளார். அதேபோல், சீனா மீது கூடுதலாக 34 சதவீதம், வியட்நாம் மீது கூடுதலாக 46 சதவீதம், தைவான் மீது கூடுதலாக 32 சதவீதம், ஐரோப்பிய யூனியன் மீது கூடுதலாக 20 சதவீதம் என பல்வேறு நாடுகள் மீது வரி விதித்துள்ளார். அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா போன்ற நாடு பதிலடி கொடுத்துள்ளது.

அதன்படி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா கூடுதலாக 34 சதவீதம் வரி விதித்துள்ளது. அதேபோல், பிற நாடுகளும் அமெரிக்காவுக்கு எதிராக கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டு வருகின்றன. இதனால், அமெரிக்காவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே வர்த்தகப்போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை உலக அளவில் பங்குச்சந்தை பெரும் சரிவை சந்தித்தது.

அமெரிக்கா, ஜப்பான், ஹாங்காங், ஜெர்மனி, பிரான்ஸ், தென்கொரியா, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளின் பங்குச்சந்தை பெரும் சரிவை சந்தித்தது. இதனால் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டமடைந்துள்ளனர்.

Read Entire Article