உத்திரமேரூர்: உத்திரமேரூர் தனியார் மண்டபத்தில் ஒன்றிய அரசின் கேயில் இந்தியா லிமிடெட் மற்றும் தனியார் டிரஸ்ட் சார்பில் 2 நாள் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் டிரஸ்ட் நிறுவனர் இருதயராஜ் தலைமை தாங்கினார். அறங்காவலர்கள் ஜெயபாஸ்கர், நவீன்ராஜ், ஜெயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டு பொது மருத்துவம், பெண்கள் மற்றும் குழந்தைகள் சிறப்பு மருத்துவம், வாய், மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவம், எலும்பு சிறப்பு பிரிவு, பல் சிறப்பு மருத்துவம் மற்றும் இசிஜி மற்றும் எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை அளித்தனர். சிகிச்சை பெற்ற பொதுமக்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 2 நாள் தொடர்ந்து நடந்த முகாமில் 1200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
The post உத்திரமேரூரில் 2 நாள் சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.