உரிமைத் தொகை கோரும் பெண்களும், பணம் பறிக்கும் முனைப்பில் தரகர்களும்! - இது திருப்பூர் நிலை

7 hours ago 1

திருப்பூர்: தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில், அவ்வப்போது பல்வேறு மோசடிகள் அரங்கேறுகின்றன. அதன் ஒருபகுதியாக, வீட்டுமனைப் பட்டா தொடங்கி அடுக்குமாடி குடியிருப்பு வரை பல்வேறு மோசடிகள் தொடர்பாக, வருவாய் துறை அலுவலகங்களில் பொதுமக்கள் புகார் அளிக்கின்றனர். அதேசமயம், மறுபுறம் மனு அளித்தும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு தரப்பு மகளிரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரத் தொடங்கினர். ஒரே நாளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மகளிர் உரிமைத் தொகைக்காக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 150 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

Read Entire Article