உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் டபுள் டெக்கர் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலி

2 days ago 4

உத்தரப்பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் டபுள் டெக்கர் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகினர். பீகாரில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. லக்னோவில் அதிகாலை ஓடும் பேருந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு குழந்தைகள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட ஐந்து பயணிகள் உயிரிழந்தனர்.

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் பீகாரில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த ஸ்லீப்பர் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் உயிருடன் எரிந்து உயிரிழந்தனர். நேற்று அதிகாலை 5 மணியளவில் பேருந்து அவுட்டர் ரிங் ரோட்டில் கிசான் பாதை வழியாக மோகன்லால்கஞ்ச் அருகே வந்தபோது விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில், பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர், தீ விபத்து ஏற்பட்டவுடன், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வெளியே குதித்து தப்பி சென்றனர். ஓட்டுநர் அனைவரையும் எழுப்பியிருந்தால், யாரும் இறந்திருக்க மாட்டார்கள். பேருந்து புகையால் நிரம்பியபோதுதான் உணர்ந்ததாகவும், பின்னர் முன்பக்கத்தில் இருந்த பயணிகள் விரைவாக வெளியே குதித்ததாகவும், ஆனால் பின்னால் இருந்தவர்கள் சிக்கிக்கொண்டதாகவும் நேரில் பார்த்த பயணிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், 15.5.2025 அன்று, பெகுசராய் பீகாரில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த UP17 AT 6372 என்ற தனியார் ஸ்லீப்பர் பேருந்து, மோகன்லால்கஞ்ச், லக்னோ-ரேபரேலி சாலையில் உள்ள கிசான் பாதையில் ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீப்பிடித்தது

போலீசார் மற்றும் பொதுமக்களின் உதவியுடன், பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் பேருந்தின் கண்ணாடியை உடைத்து வெளியேற்றப்பட்டனர். பேருந்தில் சுமார் 80 பயணிகள் அமர்ந்திருப்பது கண்டறியப்பட்டது. தீயணைப்பு படையினரும் ஆம்புலன்ஸ் வாகனமும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும் ​​5 பேர் உயிரிழந்தனர்.

The post உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் டபுள் டெக்கர் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article