உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் பல கூடாரங்கள் எரிந்து நாசமடைந்த நிலையில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா பகுதியில் மீண்டும் ஒரு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜூன்சி சட்நாக் காட் நாகேஷ்வர் காட் செக்டார்-22 அருகே, கண்காட்சிப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயானது நேரத்திலேயே அருகிலுள்ள பல பந்தல்களுக்குப்பரவியது. தீ விபத்து ஏற்பட்டவுடன், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடும் போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீ விபத்தில் 15க்கும் மேற்பட்ட கூடாரங்கள் எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கும்பமேளா பகுதியில் இது மூன்றாவது தீ விபத்து ஆகும். ஜனவரி 19 அன்று, மகா கும்பமேளாவின் போது, சாஸ்திரி பாலத்திற்கு அருகிலுள்ள பத்திரிகையாளர் முகாமில் தீ விபத்து ஏற்பட்டது.
அதில் பல குடிசைகள் எரிந்து சேதமடைந்தன. இதன் பின்னர், ஜனவரி 25 ஆம் தேதி, மகாகும்ப் நகர் மேளா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்நிலையில் இன்று பிரயாக்ராஜில் 3வது முறையாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
The post உத்தரப் பிரதேச பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களில் தீ விபத்து appeared first on Dinakaran.