பாடாலூர், ஜன.31: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ், மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா ஆகியோர் உத்தரவின்படி ஆலத்தூர் தாலுகா காரை அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு எஸ்எஸ்ஐ மருதமுத்து மற்றும் மாவட்ட புகையிலை தடுப்பு மைய ஆலோசகர் மருத்துவர் வனிதா, ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளித்தனர். இதில், குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண் கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ, மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் உதவி எண்களான பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181, Women Help Desk 112, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098, பள்ளி குழந்தைகளின் பாது காப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 , முதியோர் உதவி எண்கள் 14567, சைபர் கிரைம் உதவி எண்கள் 1930, ஒவ்வொரு மாணவிகளும் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து தங்களது பெற்றோர்களிடம் அச்சமின்றி தெரிவித்து அதற்கான தீர்வினைப் பெற வேண்டும் என்றும் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர. மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தொடுதல் குறித்த விழிப்புணர்வு (GOOD TOUCH BAD TOUCH) ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம், பெண் குழந்தை திருமணத்தை எதிர்ப்போம் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.
முடிவில் அனைவருக்கும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளி தலைமையாசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார்.
The post காவல்துறை சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.