
லக்னோ,
உத்தர பிரதேச மில்கிபூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த சமாஜ்வாடி கட்சியின் அவதேஷ் பிரசாத் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து தனது எம்.எல்.ஏ பதவியை அவதேஷ் பிரசாத் ராஜினாமா செய்தார். இதனால் காலியாக இருந்த மில்கிபூர் தொகுதிக்கு இன்று கடந்த 5-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் உத்தரபிரதேசத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக முன்னிலை பெற்றுள்ளது. பாஜக சார்பில் போட்டியிட்ட சந்திரபானு பாஸ்வான் 3,991 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். சமாஜ்வாடி கட்சியின் அஜித் பிரசாத் பின்னடவை சந்தித்துள்ளார்.