உத்தர பிரதேசத்தில் கங்கா அதிவிரைவுச்சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி விமானப்படை ஒத்திகை..!!

12 hours ago 3

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தில் கங்கா அதிவிரைவுச்சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி விமானப்படை ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே தற்போது நிலவி வரும் சூழல் காரணமாக பல்வேறு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உத்தர பிரதேசத்தின் கங்கா அதிவிரைவுச்சாலையில் போர் விமானங்களை தரையிறங்கி விமான படையினர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு விவகாரங்கள், அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் செயல்பாடுகள் தொடர்ந்து முப்படை தளபதிகளை சந்திப்பதும் அவர்களிடமிருந்து வரக்கூடிய தகவல்களை குடியரசு தலைவருக்கு தெரிவிப்பதும், அதே போன்று உளவுத்துறையிடம் தகவல்களை கேட்டு தெரிவதுமாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் செயல்பாடுகள் மிக தீவிரமாக இருக்கின்றன.

இந்த நிலையில் காலையில் போர் விமானங்களை தரையிறங்கி ஒத்திகை நடைபெற்று வருகிறது. அதே போல் இந்திய தயாரிப்பு போர் விமானங்களும் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக தரமான தாக்குதல் திறன் கொண்ட ஏவுகணைகளை நிறுத்தி பிற நாடுகளை ஊடுருவி சென்று தாக்கக்கூடிய போர் விமானங்களையும் இந்தியா தொடர்ந்து உருவாக்கி வருகிறது. அதனடிப்படையில் மிராஜ், ஜாகுவார் ரக போர் விமானங்களும் தற்போது உத்தர பிரதேசத்தில் உள்ள கங்கா அதிவிரைவுச்சாலையில் தரையிறங்கி உள்ளது. இந்தியாவின் அதி நவீன ரபேல் போர் விமானத்தையும் தரையிறங்கி இருந்தனர். அதே போல் மிராஜ், ஜாகுவார் ரக போர் விமானங்களும் தற்போது அந்த சாலையில் தரையிறங்கி ஒத்திகை நடைபெற்று வருகின்றது. ஏதேனும் ஒரு அவசர காலங்கள் உடனடியாக அந்த விமானங்களை தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும் என்பதற்கான ஒத்திகை மட்டுமல்லாமல் விமானங்கள் அவசர காலங்களில் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கின்றனவா என்பதை கண்டறிய கூடிய விதமாக விமான ஒத்திகை நடைபெற்று வருகிறது.

ரபேல் போர் விமானத்தை பொறுத்தவரையில் பிரெஞ்சு கடற்கரையில் பயன்படுத்தக்கூடிய விமானம். பிரெஞ்சுக்கு பிறகு இந்தியா மட்டும் தான் விமானத்தை வாங்கி பயன்படுத்துகிறது. உலகில் அதிநவீன போர் விமானம் ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வைத்திருக்கக்கூடிய போர் விமானங்களுக்கு நிகரான ஒரு விமானம் நாம் இறக்குமதி செய்துள்ளோம்.என்றாலும் கிட்டத்தட்ட 36 ரக போர் விமானங்கள் நம்மிடம் உள்ளன. சீனா, பாகிஸ்தான் போன்ற அச்சுறுத்தல் இருக்கக்கூடிய சூழ்நிலையில் போதுமான அளவிற்கு ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்களும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டிருந்தன. தற்போது 30க்கும் கூடுதலான ரபேல் போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளதால் அவற்றை ஒத்திகையாக காலையில் இறக்கி தற்போது இந்திய விமான படை இந்த பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொண்டுள்ளது.

The post உத்தர பிரதேசத்தில் கங்கா அதிவிரைவுச்சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி விமானப்படை ஒத்திகை..!! appeared first on Dinakaran.

Read Entire Article