மதுரை : மதுரை எழுமலை உத்தபுரம் முத்தாலம்மன் கோயிலில் பட்டியலினத்தவர் வழிபாடு நடத்தலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பூட்டப்பட்ட கோயிலை திறந்து வழிபாடு நடத்த அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில், “தற்போதைய பங்குனி திருவிழாவில் பட்டியலினத்தவர் உள்பட இரு தரப்பினரும் வழிபாடு நடத்தலாம்; அரச மரத்தை அனைத்து தரப்பினரும் சுற்றி வந்து வழிபாடு நடத்தலாம்,” என நீதிபதிகள் ஆணையிட்டனர். மேலும் அரச மரத்தை தொடக் கூடாது, சந்தனம் பூசக் கூடாது, ஆணி அடிக்கக் கூடாது என நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
The post உத்தபுரம் கோயிலில் பட்டியலினத்தவர் வழிபடலாம் : ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.