உதய மாஜி மீது தெர்மாகோல் மாஜி கடுங்கோபத்தில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2 weeks ago 3


‘‘மாஜி அமைச்சர் மீது இலை கட்சி நிர்வாகிகள் கடும் கோபத்தில் இருக்காங்களாமே எதுக்காம்..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு இலை கட்சி சார்பில் புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டதாம்.. உறுப்பினர் அட்டையில் ஏற்கனவே பதவியில் இருந்த ஒன்றியம், நகரம், பேரூராட்சி செயலாளர், துணை செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு மீண்டும் அதே பதவி வழங்கப்பட்டுள்ளதாம்… கட்சியில் பல ஆண்டுகளாக ஒரே பதவியில் இருந்து கொண்டு கட்சி வளர்ச்சிக்கு பாடுபடாதவர்களுக்கு ஏன் மீண்டும் அதே பதவியை மாஜி அமைச்சர் மணியானவர் வழங்கினார் என கட்சியின் விசுவாசிகள் கோபம் அடைந்துள்ளார்களாம்.. இதனால் முதல்கட்ட, 2வது கட்ட நிர்வாகிகள் மாஜி அமைச்சருக்கு எதிராக களத்தில் இறங்கி வேலை பார்க்க முடிவு செய்துள்ளனராம்.. மீண்டும் கடலோர மாவட்டத்தில், பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பொறுப்பு அதிகாரியா நியமிக்கப்பட்டவர் பொறுப்பா சம்திங் வேட்டை நடத்துறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘குயின்பேட்டை மாவட்டத்துல மலை கோயில் அமைந்துள்ள ஊர்ல பயர் ஆபிஸ் இயங்கி வருது.. அந்த ஆபிசுல, நிலைய அலுவலர் பணியிடம் கடந்த 5 மாதமாக காலியாக உள்ளதாம்.. இதனால பொறுப்பு அலுவலரை நியமிச்சிருக்காங்களாம்.. இவரு வணிக வளாகங்கள், தனியார் பள்ளிகள், மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்துறாராம்.. இது நல்ல விஷயம் தான். ஆனா ஆய்வு நடத்துற இடத்துல பயர் அணைக்கும் கருவிகள் சரியாக உள்ளதா என்று கேட்கிறாராம்.. கருவிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சம்திங் வாங்காம வருவதில்லையாம்.. இப்படி கடமை தவறும் அதிகாரி மீதான புகார்கள், உயர் அதிகாரிக்கும் போனதாம்.. அவரும் கண்டுக்கவே இல்லையாம்.. எந்த நடவடிக்கையும் இல்லையாம்..

இதனால காலியாக உள்ள பணியிடத்திற்கு அதிகாரிய நியமிச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்னு கோரிக்கை எழுந்திருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.‘இலைக்கட்சி நிர்வாகிகள் கலக்கத்தில் இருக்கும் காரணமென்ன..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி சிட்டி இலை கட்சியில மாஜி எம்எல்ஏ, பகுதி செயலாளர் உள்ளிட்ட 6 பேரின் பதவி சமீபத்துல பறிக்கப்பட்டதாம்.. இவர்களின் பணி திருப்தி இல்லைன்னு கட்சி மேலிடத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் அறிக்கை அளித்தாராம்.. இதையடுத்துதான் இலைக்கட்சி விவிஐபி 6 பேரின் பதவியை பறித்து, அந்த பதவிகளுக்கு வேறு ஆட்களை நியமிச்சாராம்.. இதேபோல இன்னும் மாங்கனி சிட்டியில பல நிர்வாகிகளை மாற்றப் போறாங்களாம்.. மேலும் மாங்கனி சிட்டியில் உள்ள 60 வார்டுகளில், பெரிய வார்டுகளில் அதாவது 5 வாக்கு சாவடிக்கு மேல் இருக்கும் வார்டை இரண்டாக பிரித்து புதிதாக வார்டு செயலாளரை நியமிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருதாம்..

இதே மாதிரி மாவட்ட பொறுப்பாளர்கள் தனக்கு பிடிக்காதவங்க பற்றி அறிக்கை கொடுக்கும் மாவட்டத்துலயும் நிர்வாகிகளை மாற்ற திட்டமிடப்பட்டு வருதாம்.. அதற்கான கணக்கெடுப்பையும், உயர்மட்ட நிர்வாகிகள் தேர்வு செய்து வர்றாங்களாம்.. இது பொறுப்புல இருக்கும் கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில கலக்கத்தை ஏற்படுத்தி இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நீண்டகால சீனியரான தனக்கு தெரியாம பல வேலைகளை நடப்பதை கண்டு ரொம்ப கோபமாக இருக்கும் தெர்மாகோல் புகழ் மாஜி சேலத்து தரப்பிடம் நேரிலேயே முறையிடப் போகிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகரத்தில் இலைக்கட்சியில் நகர், புறநகர் மாவட்ட முக்கிய பிரமுகர்களான மாஜி மந்திரிகள் பல பிரிவுகளாக செயல்பட்டு வர்றாங்க.. கடந்த சில ஆண்டுகளாக இவர்களது நிலை எதிரும், புதிருமாகவே தொடர்கிறது..

இந்த சூழலில், சமீபத்தில் தென்மாவட்டத்துக்கு வந்த சேலத்துக்காரரை குளிர்விக்க, தூங்கா நகரின் மாஜி மந்திரியான உதயமானவர், கொஞ்சம் ஓவர் ஆக்ட் பண்ணினாராம்… இது தெர்மாகோல் மாஜிக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லையாம்.. ஒரு காலத்தில் இலைக்கட்சி முக்கிய பிரமுகராக வலம் வந்த தன்னை, இப்போதெல்லாம் தலைமை சரிவர மதிப்பதில்லை. தாமரைக்கட்சியை கடுமையாக விமர்சிக்கும் தன்னை கண்டுகொள்ளாமல், ஒப்புக்கு பேசும் உதயமானவரை தலையில் தூக்கி வைத்து தலைமை ஆடுகிறதே என ஆதரவாளர்களிடம் புலம்பி வருகிறாராம்.. தூங்கா நகரம் மட்டுமல்ல… தென்மாவட்டம் முழுவதும் தன்னை கட்சியின் விவிஐபி போல நினைத்துக் கொண்டு உதயமானவர் செயல்பட்டு வருவதாகவும், இவரை சேலத்துக்காரர் தரப்பு ரொம்பவே வளர்த்து விடுவதாகவும், நீண்டகால சீனியரான தனக்கு தெரியாமலே பல வேலைகளை அவரிடம் ெகாடுப்பதாகவும், சேலத்து தரப்பு மீது மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம் தெர்மாகோல் மாஜி.

இதுதொடர்பாக தலைமையை சந்தித்து முறையிடப் போவதாகவும் கூறியுள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நாகர்கோவில் எம்எல்ஏ தொகுதியில் போட்டியிட இப்போதே தாமரைக்கட்சியில் மல்லுக்கட்ட தொடங்கி விட்டாங்களாமே தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நடந்து முடிந்த எம்பி தேர்தலில் குமரி தொகுதியில் தனக்குத்தான் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தற்போது மாமன்ற உறுப்பினராக இருக்கும் ஜாவனானவர் மாநில தலைவர் அண்ணாமலை வரும்போது எல்லாம் விளம்பரம் முதல் பிளக்ஸ் வரை வைத்ததுடன், தொகுதி முழுவதும் கோயில் நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் என அனைத்திலும் சளைக்காமல் கலந்துகொண்டார். சமூக வலைத்தளங்களிலும் அவரது ஆதரவாளர்கள் அவருக்காக பிரசாரம் செய்து வந்தாங்க..

இந்நிலையில், பொன்னார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போது நாகர்கோவில் எம்.எல்.ஏ சீட் தரப்படும் என ஜாவனிடம் வாக்குறுதி அளித்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறி ேதர்தல் பணிகளில் கவனம் ெசலுத்தி வர்றாங்க.. இந்நிலையில், தற்போது நாகர்கோவில் முன்னாள் நகர்மன்ற தலைவியான மாமன்ற உறுப்பினர் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடுவார் என பொன்னார் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனராம்.. இதனால், நாகர்கோவில் சட்ட மன்ற தொகுதியில் யார் ேபாட்டி என்பதில் இருவரின் ஆதரவாளர்களும் இப்போதே, தங்கள் ஆதரவு மாமன்ற உறுப்பினருக்குத்தான் சீட் என தகவல் பரப்பி மல்லுக்கட்டை ெதாடங்கி விட்டனராம்.. இன்னும் போகப்ேபாக யார் யார் எல்லாம் தங்களுக்கு தான் சீட் என கிளம்பி வரப்போகிறார்களோ என முக்கிய நிர்வாகிகள் புலம்பி வருகின்றனராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post உதய மாஜி மீது தெர்மாகோல் மாஜி கடுங்கோபத்தில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article