உதகையில் சுற்றுலா தலங்கள் நாளை மூடல்

5 hours ago 3

நீலகிரி,

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நீலகிரிக்கு நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள சுற்றுலா தளங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லங்கள் உட்பட அனைத்து சுற்றுலா தலங்களும் நாளை (மே 26) மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  

Read Entire Article