
உண்மைச் சம்பவ பின்னணியில் இயக்குனர் வி.பி.வினு இயக்கியுள்ள படம் 'சாட்சி பெருமாள்'. இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அசோக் ரங்கராஜன் நடித்துள்ளார். மேலும் வி.பி.ராஜசேகர், பாண்டியம்மாள், எம்.ஆர்.கே., வீரா உட்பட பலர் நடித்துள்ளனர். மஸ்தான் இசையமைத்துள்ளார்.
பத்திரப்பதிவு அலுவலகங்களில் சாட்சி கையெழுத்துப் போடுபவரின் கதையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது இப்படம். பொதுவாக சாட்சி கையெழுத்து போடுகிறவர்களுக்கு பெரிய பிரச்சினைகள் எதுவும் இருக்காது. அரிதாக ஒருசிலர் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள் அவர்களில் ஒருவரின் கதைதான் இது. அவருக்கு ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அதை எப்படித் தீர்க்கிறார் என்பதை சொல்லும் படம் தான் இது.
இப்படம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த திரைப்பட விழாக்களில் பங்கேற்று 12 விருதுகளை வென்றுள்ளது. இந்த நிலையில் இப்படம் நேரடியாக டென்டுகொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.