உணவு விற்பனை தொடர்பான தவறான விளம்பரங்களை கட்டுபடுத்த வேண்டும்: மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்

5 months ago 16

திருவள்ளூர், டிச. 10: உணவு விற்பனை தொடர்பான தவறான விளம்பரங்களை கட்டுபடுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன் கீழ் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் நிறுவப்பட்டது. அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் இதுவரை கையாண்ட பல்வேறு சட்டங்கள் மற்றும் உத்தரவுகளை ஒருங்கிணைக்கிற எப்எஸ்எஸ்ஏஐ (FSSAI) என்பது உணவு பொருட்களுக்கான அறிவியல் அடிப்படையிலான தரநிலைகளை வகுத்து அவற்றின் உற்பத்தி, விநியோகம், விற்பனை, இறக்குமதி, சேமிப்பு, ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.

மேலும், இதன் விளம்பரங்கள் மற்றும் உரிமை கோரல்கள் உண்மையானதாகவும் தெளிவானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் தவறாக வழிநடத்தாததாகவும், விளம்பரதாரர் வழங்கிய தகவல்களை நுகர்வோர் எளிய முறையில் புரிந்துகொள்ள உதவ வேண்டும். உணவு வணிகர் தங்கள் தயாரிப்பு விற்பனையை மேம்படுத்துவதற்காக எந்தவொரு அறிவியல் பூர்வமற்ற அல்லது மிகைப்படுத்தப்பட்ட கூற்றுக்கள் மற்றும் நுகர்வோர் நலமற்று விளம்பரங்களை செய்வதிலிருந்து விலகியிருக்க வேண்டும்.

உணவு விளம்பரங்களை கட்டுபடுத்துவது மற்றும் நுகர்வோர் நலன்களை பாதுகாக்கும் நோக்கமாக கடந்த 2024 மே மாதம் ஐந்தாம் தேதி உச்ச நீதிமன்ற வழக்கு எண்: 645/2022 வழங்கிய தீர்ப்பில், விளம்பரங்களை அச்சிடுவது, ஒளிபரப்புவது, காட்சிபடுத்துவதற்கு முன்னர், விளம்பரதாரர், விளம்பர நிறுவனம் தங்கள் விளம்பரம், கேபிள், தொலைகாட்சி, நெட்வொர்க்குகளின் விதிகள் 1994-ல் குறிப்பிடப்பட்டுள்ள விளம்பர குறியீட்டினை மீறவில்லை என்ற தங்களது சுய அறிவிப்பினை அதற்காக உருவக்கப்பட்ட இணைய வழியில் சான்றளிக்க வேண்டும்.

மேலும், பதிவேற்றம் செய்யப்பட்டசுய அறிவிப்பு சான்றுகளின் நகல்களை விளம்பரதாரர் விளம்பர நிறுவனம் அதன் தொடர்புடைய நகல்களை விளம்பரதாரர், விளம்பர நிறுவனம் அதன் தொடர்புடைய ஒளிபரப்பாளர், அச்சு ஊடகம், வெளியீட்டாளர், தொலைக்காட்சி சேனல், மின்னணு ஊடகத்திற்கு தகவலுக்காக வழங்க வேண்டும். மேலும் உச்ச நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பினை தொடர்ந்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் எம்ஐபி என்ற புதிய இணையவழியை தொலைக்காட்சி, வானொலி மற்றும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா போர்டலிலும், அச்சு டிஜிட்டல் இணைய விளம்பரத்தின் சுய சான்றுகளை விளம்பரதாரர், விளம்பர நிறுவனம் விளம்பரங்கள் ஒளிபரப்புதற்கு அல்லது வெளியிடுவதற்கு முன்பாக பதிவேற்றம் செய்ய கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி அறிமுகப்படுத்தி உள்ளார். எனவே அனைத்து உணவு வணிகர்களும் உச்ச நீதிமன்றத்தின் உத்திரவினை பின்பற்றுதலை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி கூறியுள்ளார்.

The post உணவு விற்பனை தொடர்பான தவறான விளம்பரங்களை கட்டுபடுத்த வேண்டும்: மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article