ஜெயங்கொண்டம் ஜன.25: உடையார் பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஸ்டெம்(அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) தொடர்பான புரிதலை மேம்படுத்தும் ஒருநாள் கருத்து பயிற்சிப்பட்டறை திருச்சி கோரோட் அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்றது. நிகழ்வில் தலைமையாசிரியர் முனைவர் முல்லைக்கொடி தலைமை வகித்தார்.
உதவி தலைமையாசிரியர் செல்வராஜ் வரவேற்றார் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேப்பெருமாள் முன்னிலையாற்றினார், சிறப்பு நிர்வாகபொறுப்பாளர் பத்மாவதி கலந்துகொண்டு குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் செயல்பாடுகள், கற்றலை மேம்படுத்தும் வகையில் ஸ்டெம் சார்ந்த கருத்துகள் பங்கேற்பு முறையில் பட அட்டைகள் மூலம் விளக்கினார், அறிவியல்என்பதை ஒரு பாடமாக மட்டும் இல்லாமல் சிந்திக்கும் திறனாகவும், தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகளின் அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றியும் விளக்கங்களையும் கொடுத்தார்.
மேலும் பெண்குழந்தைகள் தன்னை சுற்றியுள்ள அறிவியலை உணர்வும் அறிவியல் சார்ந்து தனது வாழ்வின் இலக்கை நிர்னைக்கவும் இந்த பயிற்சி உதவியாக இருக்கும் என்று விளக்கி கூறினார். பயிற்சியாளர்களாக வசந்தன், மகேஸ்வரி, சுஜாதா செயல்பட்டனர், 9,10,11,12ம் வகுப்பு மாணவிகள் பயிற்சி பெற்றனர். ஆசிரியர்கள் சாந்தி, சுந்தரி, தமிழரசி, அருட்செல்வி, மாரியம்மாள் தமிழாசிரியர் ராமலிங்கம் கலந்துகொண்டனர். அறிவியல் ஆசிரியர் ராஜசேகரன் நன்றி கூறினார்.
The post உடையார்பாளையத்தில் மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்த பயிற்சி பட்டறை appeared first on Dinakaran.