உடுமலை, பிப்.12: உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் நேற்று தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. உடுமலை ருத்ரப்ப நகரில் உள்ள செல்வமுத்துக்குமார சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, வள்ளி, தெய்வானை உடனமர் முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
போடிப்பட்டி பாலதண்டாயுதபாணி கோயில், உடுமலை பிரசன்ன விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், பழனியாண்டவர் நகர் பாலமுருகன் கோயில், திருமூர்த்திமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், நேருநகர் காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியர், பாப்பான்குளம் பாலதண்டாயுதபாணி கோயில் ஆகிய இடங்களில் தைப்பூசத்தை முன்னிட்டு விசேஷ வழிபாடுகள் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
The post உடுமலை முருகன் கோயில்களில் தைப்பூசம் கோலாகலம் appeared first on Dinakaran.