உடுமலை அடுத்த மைவாடி பகுதியில் பாலத்தின் கீழ் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

1 day ago 3

உடுமலை: உடுமலை மடத்துக்குளம் வழியாக செல்லும் நான்கு வழிச்சாலையில் மைவாடி பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் அடியில் உள்ள சாலை வழியாக கணியூர், மடத்துக்குளம், உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் வாகனங்கள் சென்று வருகின்றன. அதுமட்டுமல்லாமல் நான்கு வழிச்சாலையில் பயணித்து அணுகுசாலை வழியாக இந்த சாலையில் இணையும் வாகனங்களும் பாலத்தின் அடிப்புறம் கடக்கின்றன.

இந்த பாலம் உயரம் குறைவாக உள்ளதால் கனரக வாகனங்கள் மற்றும் வைக்கோல், சோளத்தட்டை உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் பாலத்தின் அடியில் சிக்கிக் கொள்கின்றன. இந்நிலையில் நேற்று இரவு இந்த பாலத்தின் கீழ் உள்ள சாலையில் சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று அடிபுறத்தில் சிக்கிக் கொண்டதால் இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாலத்தின் அடிப்பகுதி ஒரே மாதிரியான உயரத்தில் இல்லாததால் அடிக்கடி இந்த பகுதியில் கனரக வாகனங்கள் சிக்கிக் கொள்வதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். கட்டி முடிக்கப்பட்ட பாலத்தில் மாற்றம் செய்ய முடியாத நிலையில், சாலையின் உயரத்தைக் குறைத்து வாகனங்கள் எளிதாக சென்று வருவதற்கு வழி செய்ய வேண்டும் என்பது வாகன ஓட்டுக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post உடுமலை அடுத்த மைவாடி பகுதியில் பாலத்தின் கீழ் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article