கள்ளக்காதலனின் முகவரி தராததால் பைக்கை எரித்த பெண்ணுக்கு வலை

17 hours ago 3

தஞ்சை: தலைமறைவான கள்ளக்காதலனின் முகவரியை கேட்டும் கொடுக்காததால் அவரது அண்ணனின் பைக்கை தீ வைத்து எரித்த பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர். தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் என்.எஸ்.ஓ நகரை சேர்ந்தவர் மண்டை கார்த்திக்(எ) கார்த்தி(40). சரித்திர பதிவேடு குற்றவாளி. இவருக்கும் திருபுவனம், கன்னித்தோப்பை சேர்ந்த ரமேஷின் மனைவி ரேவதிக்கும்(35) கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் ரேவதி கணவர் ரமேஷ் மற்றும் மூன்று குழந்தைகளை பிரிந்து கார்த்திக்குடன் தனியாக வாழ்ந்தார்.

இந்நிலையில் கார்த்திக், ரேவதியுடன் பழகுவதை தவிர்த்ததுடன், அவரது வீட்டு வருவதை தவிர்த்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த ரேவதி கார்த்திக் எங்கு இருக்கிறாரோ அங்கெல்லாம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  இந்த நிலையில் கார்த்திக்கின் உறவினர்கள் அவரை, திருப்பூருக்கு வேலைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான கள்ளக்காதலனை தேடி வந்த ரேவதி திருவிடைமருதூரில் உள்ள கார்த்திக்கின் அண்ணன் அன்பரசன் வீட்டிற்கு சென்று எங்களை பிரித்தது நீங்கள் தான், கார்த்தி எங்கே இருக்கிறார், எனக்கு உடனே அவரது முகவரியை கொடுங்கள் என கேட்டு தகராறில் ஈடுபட்டாராம்.

இந்நிலையில், நள்ளிரவு அன்பரசன் வீட்டு வாசலில் இருந்த அவரது பைக் திடீரென தீப்பற்றி எரிந்தது. அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இரண்டு சக்கர வாகனத்தை நள்ளிரவில் ரேவதி தீ வைத்து கொளுத்தி விட்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரேவதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post கள்ளக்காதலனின் முகவரி தராததால் பைக்கை எரித்த பெண்ணுக்கு வலை appeared first on Dinakaran.

Read Entire Article