மண்டபம்,ஜன.30: உச்சிப்புளி அருகே சாத்தக்கோன்வலசை கிராம பகுதிக்கு செல்லும் சாலையின் அருகே அமைந்துள்ள சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உச்சப்புளி அருகே சாத்தக்கோன்வலசை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இருளப்பசாமி கோவில் வழியாக பிரிவு சாலை செல்கிறது. இந்நிலையில் இந்த சாலையின் அருகே மெயின் மின்சாரம் செல்லும் கம்பி மின்கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மின் கம்பம் முற்றிலும் சிமெண்ட் கான்கிரீட் சேதம் அடைந்து அதற்குள் அமைந்துள்ள இரும்பு கம்பிகள் துருப்பிடித்து எந்த நேரத்திலும் முறிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் பொது மக்களுக்கு மின் கம்பியால் மின்சாரம் தாக்கப்பட்டு ஏதேனும் விபத்துக்களை ஏற்படுத்துவதற்கு முன்பு சேதம் அடைந்த மின் கம்பத்தை மாற்ற அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post உச்சிப்புளி அருகே சேதமான மின்கம்பத்தை விரைந்து மாற்ற கோரிக்கை appeared first on Dinakaran.