உக்ரைன் மீது ரஷியா சரமாரியாக டிரோன் தாக்குதல்

4 hours ago 2

கீவ்,

நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அவற்றின் உதவியால் உக்ரைன் போரில் தாக்குப்பிடித்துநிற்கிறது.

இதற்கிடையே ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் சென்று போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போரை நிறுத்தவில்லை எனில் ரஷியா மீதான பொருளாதார தடை மேலும் விரிவுபடுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டது. இதனையடுத்து போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ரஷிய அதிபர் புதின் உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தார். அப்போது பேச்சுவார்த்தை முடியும் வரை தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியது. ஆனால் ரஷிய அதிபர் புதின் அதனை நிராகரித்தார்.

எனினும் திட்டமிட்டபடி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் போர் நிறுத்தம் தொடர்பாக எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.இந்தநிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. ஒரே நாளில் 245 டிரோன்கள் வீசப்பட்டன. இதில் அங்குள்ள பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்து 15 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

Read Entire Article