
டப்ளின்,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது.
இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அயர்லாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் தொடருகிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.