
இந்தவார ராசிபலன்:-
மேஷம்
தன் உறவுகளுக்கு வரும் துன்பத்தால் அதிக மனத்துயரம் அடையும் மேஷம் ராசியினர் இந்த வாரம் எதிர்கால நலன்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்துவர். பதினொன்றாம் இடத்தில் உள்ள ராகு பல யோகங்களை தருவார்.
ஓட்டல் தொழில்துறையினர் மற்றும் ஜவுளி வியாபாரிகள் நுட்பமாக செயல்பட்டு சிக்கல்களை தீர்ப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பை பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட் துறையினருக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது. ஷேர் மார்க்கெட் பிரிவினர் பெட்ரோலிய நிறுவன பங்குகளில் லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு உற்சாகமாக இருப்பார்கள்.
காய்ச்சல், தலைவலி, சளி ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும். ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம், ஆடை தானம் செய்வதன் மூலம் நன்மைகள் பெருகும்.
ரிஷபம்
அவரவர் கடமை அவரவருக்கு முக்கியம் என்ற கருத்தைக் கொண்ட ரிஷபம் ராசியினர் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவார்கள். லாபஸ்தான சனி, தன ஸ்தான குரு பல நன்மைகளை செய்வார்கள்.
வாகன உற்பத்தி தொழில்துறையினர், விளைபொருள் வியாபாரிகள் சிறப்பான வளர்ச்சி பெறுவதுடன் சமூக மதிப்பை பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஏற்று திறமையாக செயல்படுவர்.
ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் பிரிவினர் புதிய முதலீடுகளை செய்வதற்கான காலகட்டம் இது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து திட்டமிட வேண்டிய காலகட்டம் இது.
கை கால்களில் வலி, உடல் அசதி ஆகியவற்றுக்கு நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும். வீட்டுக்கு அருகில் உள்ள அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து மல்லிகை பூ மாலை சூட்டி பிராத்தனை செய்தால் வேண்டியது நடக்கும்.
மிதுனம்
சிந்தித்து செயல்பட்டு அனைத்திலும் வெற்றி பெறும் மிதுனம் ராசியினருக்கு இந்த வாரம் மனதில் குதூகலமும், மகிழ்ச்சியும் ஏற்படும். பத்தாம் இடத்தில் உள்ள சனி உங்களை பிரபலப்படுத்துவார்.
அச்சக தொழில் துறையினர், ஹார்டுவேர், இரும்பு வியாபாரிகள் புதிய கிளை தொடங்குவார்கள். அரசு உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த அங்கீகாரம் பெறுவர்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எரிவாயு நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவர்.
கைகால், முதுகு வலி, உடல் அசதி ஏற்பட்டு சரியாகும். ஆதரவற்ற குழந்தைகள், இளம் பெண்களுக்கு பொருளுதவி செய்வது நன்மைகளை தரும்.
கடகம்
தடைகளைக் கடந்து எந்த ஒரு வேலையையும் செய்து முடிக்கும் பக்குவம் பெற்ற கடகம் ராசியினருக்கு இந்த வாரம் புதிய செய்திகள் வந்து சேரும். அஷ்டம ராகு, தனஸ்தான கேது ஆகியோர் திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்கள்.
இரும்பு தொழில்துறையினர், எண்ணெய், திரவ வியாபாரிகள் பல நாட்களாக திட்டமிட்ட விஷயங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பர். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் புதிய மாற்றங்களை சந்தித்து செயல்பட வேண்டும்.
ரியல் எஸ்டேட் துறையினர் கட்டுமான பணிகளை நேரில் பார்வை செய்யவும். ஷேர் மார்க்கெட் பிரிவினருக்கு புதிய பங்குதாரர்கள் மூலம் நன்மை ஏற்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தனித்திறமைகளை வெளிக்காட்டி பாராட்டு பெறுவார்கள்.
வெளியிடங்களில் நீர்ப்பருகுவது, சாப்பிடுவது ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும். புற்று கோவிலுக்கு பூஜைக்கு தேவையான பால் மற்றும் மல்லிகை மாலை வழங்குவதன் மூலம் நன்மை ஏற்படும்.
சிம்மம்
இன்பம், துன்பம் எதுவுமே குறுகிய காலம் என்ற உண்மையை உணர்ந்த சிம்மம் ராசியினருக்கு இந்த வாரம் திடீர் தன வரவு ஏற்படும். லாப ஸ்தான குரு பல சிக்கல்களுக்கு கை கொடுத்து உதவுவார்.
மளிகை தொழில் துறையினர், பர்னிச்சர், நகை வியாபாரிகள் கொள்முதலில் வழக்கத்தை விட குறைவாக செய்வது நல்லது. அரசு உத்தியோகஸ்தர்கள் மனதிற்கு இனிய சூழலில் பணியாற்றுவர்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எதிர்பார்த்த லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேடிக்கை விளையாட்டுகளில் இருந்து விலகி பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
அஜீரணக் கோளாறு, வயிற்று வலி ஏற்பட்டு விலகும். தூய்மைப் பணியாளர்களுக்கு அன்னதானம், தன தானம் செய்வது நல்லது.
கன்னி
எண்ணங்கள் பல மனதில் ஓடினாலும், காரிய குழப்பமின்றி செயல்பட்டு வெற்றி பெறும் கன்னி ராசியினர் இந்த வாரம் பல்வேறு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். பாக்கிய ஸ்தானத்தில் உள்ள ராசியதிபதி தக்க சமயத்தில் மரியாதையை காப்பாற்றி உதவுவார்.
நவநாகரிக ஆடை தயாரிப்பு தொழில்துறையினர், பெண்கள் உடை வியாபாரிகளுக்கு கடந்த கால தொழில் பிரச்சினைகள் விலகி லாபம் அடைவர். தனியார் உத்தியோகஸ்தர்கள் வேறு பணி வாய்ப்பு குறித்த தகவலை பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் பிரிவினருக்கு பிரகாசமான காலகட்டம் இது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்களது வழிகாட்டுதல்களை பெறுவது எதிர்கால வெற்றிக்கு வழிவகுக்கும்.
உடலில் அசதி, கைகால் வலி, சோர்வு ஏற்பட்டு விலகும். பசு மாட்டுக்கு அருகம்புல், வெண்பூசணி உண்ணக் கொடுப்பதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.
துலாம்
சொன்னபடியே வேலைகளை முடிக்கும் திறன் பெற்ற துலாம் ராசியினருக்கு இந்த வாரம் குடும்பத்திலும், சமூகத்திலும், மதிப்பு மரியாதை பெருகும். பாக்கிய ஸ்தான குரு மனதில் உற்சாகத்தை தருவார்.
ஓட்டல் தொழில்துறையினர், விவசாய விளைபொருள் வியாபாரிகள் தொழில் விரிவாக்கம் செய்வதற்கான வசதி வாய்ப்புகளை பெறுவர். அரசு உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டு.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் முதலீடு செய்வார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எரிவாயு நிறுவன பங்குகளில் ஆதாயம் பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி மற்றும் பணி வாய்ப்பு குறித்த தகவல்களை பெறுவர்.
ஜலதோஷம், இருமல் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை மூலம் அகலும். அனாதை இல்லங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை இயன்ற அளவு வாங்கித் தருவதால் நன்மைகள் ஏற்படும்.
விருச்சிகம்
வேகத்திலும், நிதானமாக செயல்படும் தன்மை கொண்ட விருச்சிகம் ராசியினருக்கு இந்த வாரம் தடைபட்ட பொருளாதாரம் வந்து சேரும்.
எண்ணெய் வித்து தொழில்துறையினர், ஆடை, ஆபரண வியாபாரிகள் வெளியூர் பயணங்களை மேற்கொள்வர். அரசு உத்தியோகஸ்தர்கள் பணி உயர்வை பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட் துறையினர் தொழில் விருத்தி அடைவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் வேளாண் விளைபொருள் விற்பனை, ஓட்டல் துறை நிறுவன பங்குகளால் லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவர்.
காய்ச்சல், தொண்டை வலி ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை அவசியம். தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு எழுதுபொருள், நோட்டுப்புத்தகம் தானம் செய்தால் நன்மைகள் ஏற்படும்.
தனுசு
கெட்டது நினைத்தவர்களுக்கும் நன்மை செய்யும் மனப்பக்குவம் கொண்ட தனுசு ராசியினர், இந்த வாரம் நீண்ட நாட்களாக திட்டமிட்ட விஷயங்களை நல்லவிதமாக செய்து முடிப்பார்கள். சப்தம ஸ்தான குரு பல நல்ல விஷயங்களை நடத்தி வைப்பார்.
எக்ஸ்போர்ட் தொழில்துறையினர் மற்றும் மளிகை வியாபாரிகளுக்கு நல்ல லாபகரமான காலகட்டம். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் பணி சம்பந்தமான விஷயங்களை மட்டும் பேசுவது நல்லது.
ஷேர் மார்க்கெட் பிரிவினர் மசாலா, வேளாண் பொருள் விற்பனை நிறுவன பங்குகளில் லாபம் அடைவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய கட்டுமான திட்டங்களை தொடங்குவர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் திறமையாக செயல்படுவர்.
காய்ச்சல், சளி, தொண்டை வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை மூலம் குணமடையும். சிவன் கோவில் கருவறையில் தெரியும் நந்தா விளக்கிற்கு பசு நெய் வழங்குவதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும்.
மகரம்
எடுத்துக் கொண்ட காரியத்தில் இருந்து பின் வாங்காமல் செய்து முடிக்கும் திறமை படைத்த மகரம் ராசியினருக்கு இந்த வாரம் திடீர் பயணங்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். சுக ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் புதிய ஆடை ஆபரண சேர்க்கைக்கு வழிவகுப்பார்.
இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் துறையினர் மற்றும் மருந்து, கெமிக்கல் வியாபாரிகள் துணிச்சலாக செயல்பட்டு வெற்றி பெறுவர். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து அவரது ஆதரவை பெற வேண்டும்.
ரியல் எஸ்டேட் துறையினர் வேறு ஊர்களில் புதிய கட்டுமானத் திட்டங்களை தொடங்குவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் வெளிநாட்டு பங்குகளில் ஆதாயம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு புதிய இடங்களுக்கு செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பிரஷர், சுகர் பாதிப்பு உள்ளவர்கள் மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். மனைவி வழி உறவினர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும்.
கும்பம்
நேர்மையை எப்போதும் விட்டு தரக்கூடாது என்ற கொள்கை கொண்ட கும்பம் ராசியினர், இந்த வாரம் உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் லாபம் அடைவார்கள். பஞ்சம ஸ்தானத்தில் உள்ள குரு பல நன்மைகளை தந்தருள்வார்.
ஆபரண, பாத்திர தொழில் துறையினர், திரவம், கால்நடை வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றங்கள், லாபங்கள் வந்து சேரும். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் தகுந்த மதிப்பை பெறுவார்கள்.
ஷேர் மார்க்கெட் பிரிவினர் ஓட்டல், எரிவாயு நிறுவன பங்குகளில் லாபம். அடைவர். ரியல் எஸ்டேட் பிரிவினருக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு வண்டி வாகனங்களில் நிதானமாக செல்வது அவசியம்.
பயணங்கள் மூலம் உடல் அசதியும், களைப்பும் ஏற்படும். பெருமாள் கோவில் பக்தர்களுக்கு புளியோதரை மற்றும் சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாக தருவதால் நன்மைகள் உண்டு.
மீனம்
பிறர் மனதை எளிதாக அறியும் திறன் பெற்ற மீனம் ராசியினருக்கு இந்த வாரம் புதிய தொடர்புகள் மூலம் பல சிக்கல்கள் அகலும். தைரிய ஸ்தானத்தில் உள்ள சூரிய பகவான் காரிய வெற்றிகளை தருவார்.
உற்பத்தி தொழில் துறையினர், எந்திர பொருள் வியாபாரிகள் தங்கள் அனுபவங்கள் மூலம் கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடுபட வேண்டும். தனியார் உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும்.
ரியல் எஸ்டேட் துறையினர் நன்மை பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எரிவாயு நிறுவன பங்குகளில் கவனம் செலுத்த வேண்டும். பள்ளி கல்லூரி மாணவர்கள் கூடுதல் கவனத்தோடு பாடங்களை படிக்க வேண்டும்.
வயிற்று வலி, ஜீரண கோளாறு, முதுகு வலி ஆகியவை ஏற்பட்டு நீங்கும். தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களிடம் ஆசிகளை பெறுவதும் அவர்களுக்கு பரிசுகள் அளிப்பதும் பல நன்மைகளை ஏற்படுத்தும்.
