உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மருத்துவமனையில் உயிரிழப்பு

3 months ago 21

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, கடந்த ஞாயிற்றுக்கிழமை 22 வயது நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அந்த சிறுமியை கடுமையாக தாக்கி, கை மற்றும் கால்களை கட்டி வயல்வெளியில் வீசிவிட்டு அந்த நபர் தப்பிச் சென்றார்.

பின்னர் சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமியின் பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த திங்கள்கிழமை குற்றவாளியை கைது செய்தனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் கைதான நபர் மீது ஏற்கனவே போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Read Entire Article