உ.பி: மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து பைக்கில் சென்ற பெண் படுகாயம்

1 week ago 8

லக்னோ,

உத்தர பிரதேசம் மாநிலம் மொராதாபாத் பகுதியில் சீன மாஞ்சா நூலினால் பெண்ணின் கழுத்து அறுபட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொரதாபாத் மஜோலா குஷல்பூர் காவல் நிலையம், பேங்க் காலனியில் வசிக்கும் வங்கி மேலாளரான கோமல், தனது இருசக்கர வாகனத்தில் காஷிராம் கேட் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பட்டம் விடுவதற்காக பயன்படுத்தப்பட்ட சீன மாஞ்சா நூல் அவரது கழுத்தில் சிக்கியுள்ளது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும், அவரது கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Read Entire Article