உரக்கரைசல் கலந்த தண்ணீரை குடித்த 40 ஆடுகள் பலி

2 days ago 3

கோவை மாவட்டம் காளிமங்கலம் மலைக்கிராமத்தை சேர்ந்த சாவித்திரி, விஜயா, மங்கலம் மற்றும் கண்ணம்மா ஆகியோர் வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் 4 பேரும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் அங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஆடுகளை மேய்க்க சென்றுள்ளனர்.

ஆடு மேய்த்து விட்டு திரும்பி மலைக் கிராம பகுதிக்கு வந்த பொழுது, தாகத்துடன் இருந்த 40 ஆடுகள் அங்குள்ள வாழை தோட்டத்தில் பாய்ச்சி இருந்த நீரை குடிக்கத் தொடங்கின.

அப்போது ஆடுகள் ஒவ்வொன்றாக மயங்கி விழுந்தன. பின்னர் அந்த ஆடுகள் துடிதுடித்து அதே இடத்தில் இறந்தன. இதனை பார்த்த அதன் உரிமையாளர்களான அந்த பெண்கள் 4 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்தனர். அப்போது, அந்த வாழைத் தோட்டத்தில், விளைச்சலுக்காக, உரக் கரைசலை தண்ணீரில் கலந்து விட்டுள்ளனர். அந்த தண்ணீரை குடித்ததால் தான் வெள்ளாடுகள் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.

வாழ்வாதாரமாக இருந்த அந்த ஆடுகள் தங்கள் கண்ணெதிரே பலியானதால், அதன் உரிமையாளர்களுக்கு ரூ.5 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஆடுகளை இழந்து தவிக்கும் அந்த பெண்களுக்கு மீண்டும் ஆடுகள் வளர்ப்புக்கு தேவையான நிதி உதவி செய்து அரசு சார்பில் உதவ வேண்டும் என்று அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.

Read Entire Article