
புதுடெல்லி,
உத்தர பிரதேச மாநிலத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு அலகாபாத் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியதை அடுத்து, சம்பந்தப்பட்ட நபர் தலைமறைவான விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, நாடு முழுவதும் குழந்தை கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்குகளின் நிலை என்ன? என்பது குறித்து ஐகோர்ட்டுகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, மருத்துவமனையில் இருந்து குழந்தை கடத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.