நாங்கள் நல்ல தொடக்கத்தை கொடுத்தோம்; டெல்லியை ஸ்டார்க் வெற்றி பெற வைத்தார் - சஞ்சு சாம்சன்

2 days ago 2

புதுடெல்லி,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 31 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 188 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான், 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது. இதனால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் போடப்பட்டது. சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

போடிக்கு பிறகு பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், "நாங்கள் நன்றாக பந்து வீசினோம். பவர் பிளேவிலும் நல்ல தொடக்கத்தை கொடுத்தோம். எங்கள் அணி வீரர்கள் களத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள்.

இந்த இலக்கு எட்டக்கூடிய இலக்குதான். அந்த அளவுக்கு எங்கள் அணியின் பலமான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஆனால் டெல்லி அணிக்கு 20-வது ஓவரில் மிட்செல் ஸ்டார்க்தான் வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார். உலகின் மிகச்சிறந்த பவுலர் என்று மீண்டும் ஸ்டார்க் நிரூபித்து இருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று தெரிவித்தார். 

Read Entire Article