
கிறிஸ்தவ மதத்தினரின் முக்கிய பண்டிகளில் ஈஸ்டரும் ஒன்று. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர் 3வது நாளில் உயிர்த்தெழுத்தார் என்று பைபிள் கூறுகிறது.
இயேசு உயிர்த்தெழுந்த இந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டராக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டிலும் ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.