ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தி.மு.க., நா.த.க. வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு

3 hours ago 2

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி சென்னையில் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறும் என்று கடந்த 7-ந்தேதி அறிவிக்கப்பட்டது.10-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 17 ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது.

திமுக, நாம் தமிழர் கட்சி உள்பட மொத்தம் 58 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது.

இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமாரின் மனு ஏற்கப்பட்டுள்ளது. இதேபோல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதா லட்சுமியின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சுயேச்சைகள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேட்புமனுக்களை வாபஸ் பெற வருகிற 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்படும். அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வாக்குப்பதிவும், 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

Read Entire Article