மதுரை ,
மதுரையில் திருப்பரங்குன்றம் மலை மதநல்லிணத்திற்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்து வருகிறது. மலைக்கு கீழ் சுப்பிரமணிய சுவாமி கோவிலும், மலை மீது சிக்கந்தர் பள்ளிவாசல் தர்காவும் இருக்கிறது. இந்த நிலையில் , ஆடு, கோழியுடன் திருப்பரங்குன்றம் மலை மீது இஸ்லாமியர்கள் இன்று ஏற முயன்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா பள்ளிவாசலுக்கு ஆடு மற்றும் கோழிகளை எடுத்து சென்று பலியிட அனுமதியில்லை என ஏற்கனவே காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர். சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழி அறுக்க இந்து அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் , ஆடு, கோழியுடன் தடையை மீறி திருப்பரங்குன்றம் மலை மீதுஏற முயன்றபள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இஸ்லாமியர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது .
மலை மீது உள்ள தர்காவில் வழிபாடு நடத்த மட்டுமே போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.