ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டி

3 hours ago 1

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் வெளியிட்டுள்ளார். வெளி மாநிலத்தை சேர்ந்த வேட்பாளர்கள் மனு கடைசி நேரத்தில் நிராகரித்தனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 47ல் இருந்து 46 ஆக குறைந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டிசம்பர் 14ல் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் காலியானதாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் பிப்ரவரி 5ல் இடைத்தேர்தல் நடக்கிறது. பிப்ரவரி 8ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த, ஜனவரி 10ம் தேதி தொடங்கி 17ம் தேதி முடிந்தது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ., தே.மு.தி.க, த.வெ.க., கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளன. இதனால் தி.மு.க., சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களுடன் சுயேட்சைகளும் சேர்த்து மொத்தம் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு வாபஸ் பெறும் காலக்கெடு நேற்று (ஜன.20) பிற்பகல் 3 மணியுடன் முடிந்தது. 8 சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இதையடுத்து, தேர்தல் களத்தில் தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 47 பேர் வேட்பாளர்களாக களத்தில் இருந்தனர். இந்நிலையில் வெளி மாநிலத்தை சேர்ந்த வேட்பாளர்கள் மனு கடைசி நேரத்தில் நிராகரிபட்டதால் வேட்பாளர்கள் எண்ணிக்கை 47ல் இருந்து 46 ஆக குறைந்துள்ளது.

The post ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டி appeared first on Dinakaran.

Read Entire Article