ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வேட்புமனு மீதான பரிசீலனை நிறைவு: திமுக, நாதக உட்பட 55 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு!!

7 hours ago 2

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மரணமடைந்ததால் அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் 5ம் தேதி வாக்குப்பதிவும், 8ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல், கடந்த 10ம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது.

அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக ஆகிய கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன. இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளராக போட்டியிடும் வி.சி.சந்திரக்குமார் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதேபோல், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடும் சீதாலட்சுமியும் வேட்புமனு தாக்கல் செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 58 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நிறைவடைந்தது. அதில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வேட்பு மனு மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தமாக 55 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இல்லாத 3 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப் பெற 20ம் தேதி கடைசி நாள். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வேட்புமனு மீதான பரிசீலனை நிறைவு: திமுக, நாதக உட்பட 55 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article