ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 53.63% வாக்குகள் பதிவு

3 months ago 10

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.63 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 7 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 10.95% ஆக இருந்த வாக்கு சதவீதம், 11 மணி நிலவரப்படி 26.03% ஆக இருந்தது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.41% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 53.63 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

Read Entire Article