சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நேற்று வெளியிட்ட அறிக்கை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர் வி.சி. சந்திரகுமாருக்கு மனிதநேய மக்கள் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அரசமைப்புச் சட்டத்தின் உண்மை சாராம்சத்தை நீர்த்துப் போகச் செய்யாமல் தடுக்கவும் பாஜவிற்கு எதிராக உள்ள இந்தியா கூட்டணி இன்னும் பலமாக களப்பணியாற்ற வேண்டிய பொறுப்புடன் இருக்கிறது.
கடந்த இடைத்தேர்தலை விட இம்முறை இன்னும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற வைக்க வேண்டுமென ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு: மமக அறிவிப்பு appeared first on Dinakaran.