இஸ்ரோவுக்கு புதிய தலைவர்: குமரியை சேர்ந்தவர்

4 months ago 9

புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவராக கேரளாவை சேர்ந்த சோம்நாத் உள்ளார். கடந்த 2022ம் ஆண்டு தலைவராக பதவியேற்ற இவரது பதவி காலம் வரும் 14ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணனை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன், திருவனந்தபுரத்தில் வலியமலாவில் உள்ள திரவ உந்து அமைப்பு மைய இயக்குனராக பணியற்றியுள்ளார். இவர் ஜி.எஸ்.எல்.வி., எம்.கே-3, கிரயோஜெனிக் இன்ஜின் உள்ளிட்ட திட்டஙகளுக்கு முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வரும் 14ம் தேதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்று அடுத்த 2 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்.

The post இஸ்ரோவுக்கு புதிய தலைவர்: குமரியை சேர்ந்தவர் appeared first on Dinakaran.

Read Entire Article