டெல் அவிவ்: பாலஸ்தீன ஹமாஸ் படையும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹமாஸ் போராளிகள் தாங்கள் பிடித்து வைத்திருந்த பணய கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக இஸ்ரேலும் தங்கள் சிறைகளில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவித்து வருகின்றது. இஸ்ரேல் தாக்குதலின் போது வடக்கு காசாவில் இருந்த பாலஸ்தீனர்கள் தெற்கு காசாவிற்கு இடம் பெயர்ந்தனர்.அவர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு இஸ்ரேல் ராணுவம் அனுமதித்தது. இதன்படி ஏராளமான பாலஸ்தீனர்கள் வடக்கு காசாவுக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில், வடக்கு காசாவையும் தெற்கு காசாவையும் இணைக்கும் நெட்ஸரிம் பகுதியில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டதாக இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
The post இஸ்ரேல் படைகள் வாபஸ் appeared first on Dinakaran.