நீலகிரி மாவட்டத்தில் அகில இந்திய என்சிசி மாணவிகள் 2-வது குழு மலையேற்ற பயிற்சி முகாம்

3 hours ago 1

ஊட்டி : அகில இந்திய என்சிசி., மாணவிகள் 2-வது குழுவின் மலையேற்ற பயிற்சி முகாம் ஊட்டியில் துவங்கியுள்ளது. அகில இந்திய என்.சி.சி., மாணவிகளின் 37ம் ஆண்டு மலையேற்ற பயிற்சி முகாமின் முதல் குழுவின் மலையேற்ற முகாம் ஊட்டியில் கடந்த 5ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 510 பள்ளி, கல்லூரி என்.சி.சி., மாணவிகள் பங்கேற்றனர். இவர்கள் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் 2-வது குழுவின் மலையேற்ற முகாம் கடந்த 13ம் தேதி துவங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, கோவா, லட்சத்தீவு உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 510 என்சிசி., மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இதனை கமோடர் ராகவ் துவக்கி வைத்தார். இவர்கள் ஊட்டி முத்தோரை பாலாடா ஏகலைவா பழங்குடியினர் மாதிரி பள்ளி மையத்தில் தங்கி நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

காலை 8 மணியளவில் புறப்பட்டு நாள்தோறும் 20 கிமீ தூரம் நடைபயணம் மேற்கொள்கின்றனர். இப்பயணத்தின் போது பழங்குடியினர் ஆய்வு மையம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் சென்று பார்வையிட உள்ளனர்.

இந்த பயிற்சி முகாம் குரூப் கமாண்டர் கர்னல் ராமநாதன், கர்னல் ரவிச்சந்திரன், லெப்டினென்ட் கர்னல் தீபக், டெபுடி கமாண்டன்ட் கார்த்திக் மோகன், ஒருங்கிணைப்பாளர் கர்னல் சந்தோஷ், பாதுகாப்பு அலுவலர் மேஜர் மஞ்சித் கவுர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. குழுவின் மலையேற்ற முகாம் வரும் 20ம் தேதியுடன் நிறைவடைகிறது.

The post நீலகிரி மாவட்டத்தில் அகில இந்திய என்சிசி மாணவிகள் 2-வது குழு மலையேற்ற பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article