செயற்கை புல்வெளி விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை

3 hours ago 1

*முதல்வருக்கு ஹாக்கி வீரர்கள் நன்றி

குன்னூர்: நீலகிரி மாவட்ட அளவில் ஹாக்கி போட்டிகளை குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வனமகன் குழுமம் மற்றும் ஹாக்கி யூனிட் ஆப் நீலகிரி இணைந்து நேற்று தொடங்கினர்.

மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து 22 அணிகள் பங்கேற்கவுள்ள போட்டி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. நேற்று துவங்கிய இப்போட்டியை ஹாக்கி யூனிட் ஆப் நீலகிரி அமைப்பின் துணை தலைவர் சுரேஷ்குமார், பொருளாளர் ராஜா போட்டியை துவங்கி வைத்தனர்.

மேலும் வனமகன் குழுமத்தை சார்ந்த பிரதீப், பிரசாந்த், மனோஜ், சுகுமார், விசுவநாதன் ஆகியோர் வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினர். இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டியில் மலர் கண்காட்சியை துவங்கி வைக்க வந்த நிலையில் ‘குன்னூரில் செயற்கை புல்வெளி விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்’ என தெரிவித்து இருந்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து குன்னூர் பகுதியில் ஹாக்கி விளையாட்டு வீரர்களும், ஹாக்கி விளையாட்டு ஆர்வலர்களும் மிக்க மகிழ்ச்சி அடைந்ததோடு, முதல்வருக்கு நன்றியை தெரிவித்தனர். ஹாக்கி யூனிட் ஆப் நீலகிரி அமைப்பின் தலைவர் அனந்த கிருஷ்ணன் முதலமைச்சருக்கு நன்றி கடிதத்தை தபால் மூலம் அனுப்பியுள்ளார்.

நேற்று தொடங்கிய இப்போட்டியின் இறுதிப்போட்டி வரும் 18-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஹாக்கி யூனிட் ஆப் நீல்கிரீஸ் அமைப்பின் நிர்வாகிகள் கிரி, தமிழரசன், அருள் யுவன், பிரவீன் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர். போட்டியில் நடுவர்களாக தேசிய நடுவர் சலாமத் கேலோ, இந்தியா பயிற்றுனர் சிஜிமோன்நெல்சன் ஆகியோர் செயல்பட்டனர்.

The post செயற்கை புல்வெளி விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article